2025-ம் ஆண்டு வெள்ளி, தங்கம் விலையை தாண்டி “மாஸ்’ நடைப்போட்டது.
இந்த ஜனவரி மாதத்தில், சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் வெள்ளி கிட்டத்தட்ட 115 டாலருக்குக் கூட சென்றது.
ஆனால், எவ்வளவு வேகமாக மேலே சென்றதோ, அதை விட வேகமாகவே, கடந்த மாத இறுதியில் வெள்ளி விலை சறுக்கியது.
ஒருகட்டத்தில் வெள்ளி விலை வீழ்ந்துவிடுமோ என்கிற பயமெல்லாம் எழுந்தது. ஆம்… பார்டர் லைனான 71 டாலர்கள் வரை கூட வெள்ளி விலை சென்றது. 70 டாலர்களுக்குக் கீழ் இறங்கினால், 60 டாலர்கள் வரை ‘மளமள’வென சரியும் என்று அப்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், ‘கம்பேக்’ கொடுப்பதுப்போல, கடந்த 19-ம் தேதியில் இருந்து வெள்ளி விலை சூப்பராக ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.
தற்போது சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை ஒரு அவுன்ஸுக்கு கிட்டத்தட்ட 89 டாலர்கள்.
இந்தத் திடீர் ஏற்றத்திற்கு ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தையின் மந்தநிலை, அமெரிக்கா – ஈரான் போர் பதற்றம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரிக்கு எதிரான அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு போன்றவை காரணங்கள்.