தமிழக சட்டபேரவைத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. எண்ணிப்பார்த்தால் இன்னும் 20 நாட்களே உள்ளன.
திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி போன்ற பிரதான கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துவிட்டன.
வேட்பாளர்களை அறிவிக்காத காங்கிரஸ்
ஆனால் கடந்த மாதம் வரை ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு, கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு என தொடர்ந்து திமுகவிற்கு அழுத்தம் கொடுத்த காங்கிரஸ் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காமல் காலதாமதம் செய்துவருகிறது.

உட்கட்சி பூசல் தான் காரணமா?
திமுக கூட்டணியில் 28 தொகுதிகளைப் பெற்ற காங்கிரஸ் வேட்பு மனுதாக்கல் தொடங்கிய பிறகும் வேட்பாளர்களை அறிவிக்காமல் இருப்பதற்கு காரணம் உட்கட்சி பூசலே காரணம் என்கின்றனர் அரசியல் வட்டாரத்தினர்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத் தன்மையும் இல்லை என்று வெளிப்படையாக குற்றம்சாட்டி இருந்தார்.