வேறொருவரை மணந்ததால் ஆத்திரம்; காதலனின் மனைவிக்கு HIV ரத்தம் செலுத்திய இளம்பெண்; அதிர்ச்சி சம்பவம்!

Spread the love

ஆந்திரா மாநிலம், கர்னூல் என்ற இடத்தை சேர்ந்தவர் வசுந்தரா(34). இவர் டாக்டர் ஒருவரை காதலித்து வந்தார். ஆனால் அந்த டாக்டர் வசுந்தராவை திருமணம் செய்யாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் தனது மாஜி காதலனை பழிவாங்க வசுந்தரா முடிவு செய்தார்.

இதற்காக சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த வசுந்தரா, தனது காதலனை அவரது மனைவியிடமிருந்து பிரிக்க திட்டம் தீட்டினார். வசுந்தராவின் மாஜி காதலன் திருமணம் செய்திருக்கும் பெண்ணும் ஒரு டாக்டர் ஆவார். அந்த பெண் டாக்டர் பணி முடிந்து தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது அவர் மீது வேண்டுமென்றே மற்றொரு இரு சக்கர வாகனம் வந்து மோதியது. இதனால் மாஜி காதலனின் மனைவி கீழே விழுந்து காயம் அடைந்தார்.

உடனே வசுந்தரா அப்பெண்ணிற்கு உதவி செய்வது போன்று வந்தார். அப்பெண்ணை வசுந்தரா ஆட்டோ ஒன்றில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். செல்லும் வழியில் திடீரென தன்னிடம் இருந்த ஊசியால் அப்பெண்ணின் உடம்பில் எச்.ஐ.வி வைரஸ் இருந்த ரத்தத்தை செலுத்திவிட்டு ஆட்டோவில் இருந்து இறங்கி ஓடிவிட்டார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

விசாரணையில் போலீஸார் வசுந்தராவை அளையாளம் கண்டு அவரை கைது செய்தனர். அவருக்கு உதவியை மருத்துவமனை செவிலியர் ஜோதி உட்பட மேலும் 2 பேர் என மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து போலீஸார் கூறுகையில், ”அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஜோதி அங்கு சிகிச்சைக்கு வரும் எச்.ஐ.வி பாதித்த நோயாளிகளிடம் ஆராய்ச்சிக்கு தேவை என்று கூறி ரத்தம் வாங்கி இருக்கிறார். அந்த ரத்தத்தை குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்து பயன்படுத்தி இருக்கிறார். இது தொடர்பாக அவரைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்று தெரிவித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *