வேலூரில் அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார்: லைவ் குக்கிங்கில் 3 பேர் தேர்வு செய்த செஃப் தீனா | aval vikatan cooking superstar season 3 in vellore – chef deena selected 3 for the final round

Spread the love

இரண்டாவது சுற்றில் `லைவ் குக்கிங்’ செய்யப்பட்டது. `நாகா பிராண்ட் ரவை, கோல்டு வின்னர் மற்றும் சக்தி மசாலா பயன்படுத்தி மூன்று ரெசிபிகளைச் சமைக்க வேண்டும்’ என்பது இரண்டாம் சுற்றுக்கான விதிமுறை.

அதன்படி, சிரோட்டி, ஆனியன் தூள் பக்கோடா, கோதுமை ரவா பால்பாயசம், எக் பாஸ்தா, கோதுமை ஊத்தாப்பம், கோதுமை ஸ்வீட் போண்டா, உளுந்து களி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாமை ரோல், பனீர் பசந்தா, மாப்பிள்ளை உக்கரை, பாசிப்பருப்பு சாம்பார், சப்பாத்தி, சிக்கன் கிரேவி, பால் கேசரி, பால் பூரி, ரவா கேசரி, கேழ்வரகு அடை, புதினா சிக்கன், ரவா பொங்கல், திணை பாயாசம், பாலக் புலாவ், ரைஸ் கீர், வெஜ் குருமா, அவல் பாயாசம், உருளைக்கிழங்கு மசாலா, மினி பூரி என 10 போட்டியாளர்களும் வகை வகையான ரெசிபிகளைச் செய்து அசத்தியிருந்தனர்.

இறுதிச் சுற்றுக்குத் தேர்வான மூன்று போட்டியாளர்களுடன் செஃப் தீனா

இறுதிச் சுற்றுக்குத் தேர்வான மூன்று போட்டியாளர்களுடன் செஃப் தீனா

கடும் போட்டி நிலவிய சூழலில், இறுதிப் போட்டிக்கு நித்யா, ஜெயந்தி, துளசி சரவணன் ஆகிய மூவரையும் தேர்வு செய்தார் செஃப் தீனா. இவர்களின் ரெசிபி ஒவ்வொன்றும் செஃப் தீனாவுக்கே சவால் விடும் விதமாக இருந்தது.

இதையடுத்து, சக்தி மசாலா, சத்யா ஏஜென்சீஸ், நாகா, கோல்டு வின்னர், எக்ஸோ, அஸ்வின் ஸ்வீட்ஸ், ஆர்.கே.ஜி நெய், லலிதா ஜுவல்லரி, சௌபாக்யா, சுப்ரீம் ஃபர்னீச்சர், இந்தியன் ஆயில், மெரிபா பன்னீர் ஆகிய ஸ்பான்சர்கள் மூலம் அவர்களுக்குச் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.

லைவ் குக்கிங்கில் கலந்துகொண்ட மற்ற ஏழு போட்டியாளர்களும் மேடை ஏற்றப்பட்டு அவர்களுக்கும் ஸ்பான்சர்கள் மூலம் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. இரண்டாவது சுற்றில் தேர்வு செய்யப்பட்ட மூன்று பேரும் சென்னையில் நடக்கவிருக்கும் இறுதிப்போட்டியில் பங்கேற்பார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *