வேலூர்: சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அதிவேகத்தில் வந்த ஜீப் நிலை தடுமாறி சர்வீஸ் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர்.
ஜீப் அப்பளம் போல் நொறுங்கியது. காயமடைந்த ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதி வேகத்தில் வந்து கொண்டிருந்த ஜீப் நிலை தடுமாறி வேலூர் அடுத்த கொணவட்டம் பகுதியில் சர்வீஸ் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
புதன்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் இந்த விபத்தில் ஜீப் முழுவதுமாக நொறுங்கிய நிலையில், ஜிப்பில் படுகாயங்களுடன் மீட்க பட்ட நான்கு பேரில் மூவர் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், ஒருவர் வேலூர் பென்ட்லேண்ட் மருத்துவமனைக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.