வேலூர்: போதைப்பொருள் பயன்படுத்திய பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேர் கைது – கஞ்சா, போதை மாத்திரை பறிமுதல் | 7 college students from vellore arrested for drug use – cannabis and narcotic pills seized

Spread the love

வேலூர், பழைய காட்பாடி செல்வம் நகர் பகுதியிலுள்ள தனியார் குடியிருப்பில் போதைப்பொருள் விற்பனை நடப்பதாக பிரம்மபுரம் காவல் நிலையப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அடுக்குமாடி குடியிருப்பில், 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியிருந்த அறைகளில் போதைப்பொருள் பயன்பாடும், விற்பனையும் இருப்பதாகத் தெரியவந்ததையடுத்து, சோதனையை தீவிரப்படுத்தினர். அதில், 50 போதை மாத்திரைகள், 450 கிராம் கஞ்சா மற்றும் 250 கிராம் கஞ்சா ஆயில் மற்றும் 6 எடை எந்திரங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள்

கைது செய்யப்பட்ட மாணவர்கள்

மேலும், இதுதொடர்பாக 15-க்கும் மேற்பட்ட மாணவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், 7 மாணவர்கள் போதைப்பொருள்களை பயன்படுத்தியது மட்டுமின்றி, மற்ற மாணவர்களுக்கும் விற்பனைச் செய்து வந்ததாகவும் தெரியவந்தது.

வடமாநிலங்களில் இருந்து போதைப்பொருள்களை வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, போதைப்பொருள் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் 7 மாணவர்களை கைது செய்த போலீஸார், மற்றவர்களை எச்சரித்து விடுவித்தனர். கைது செய்யப்பட்ட 7 மாணவர்களும், விடுக்கப்பட்ட மாணவர்களும் வேலூர் காட்பாடியிலுள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பயில்பவர்கள். இந்த வழக்குத் தொடர்பாக, போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *