வேளாண் இடைக்கால பட்ஜெட்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல்  – Kumudam

Spread the love





வேளாண் இடைக்கால பட்ஜெட்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல்  – Kumudam – Tamil News, Magazines, Cinema, Astrology & Lifestyle
































அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். வேளாண் இடைக்கால பட்ஜெட் வாசிக்கப்படும் நிலையில், திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பச்சை துண்டு அணிந்து இருந்தனர். வேளாண் இடைக்கால பட்ஜெட் தொடர்பான அறிவிப்புகள் விபரம் வருமாறு 

வேளாண் இடைக்கால பட்ஜெட்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் 
வேளாண் இடைக்கால பட்ஜெட்

  • 5 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 28 வேளாண் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அனைத்து கிராமங்களில் வேளாண் வளர்ச்சி அடைய கலைஞர் வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 10,000 சிறுபாசன குளங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
  • *800 தரம் பிரிப்பு கூடங்களுடன் கூடிய உர கலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரூ.178 கோடி செலவில் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் நம்மாழ்வார் வேளாண் ஆராய்ச்சி மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • விரைவில் வேளாண் காடுகள் கொள்கை வெளியிடப்பட உள்ளது. மேட்டூர் அணை கடந்த 5 ஆண்டுகளில் உரிய நேரத்திற்கு திறக்கப்பட்டது.
  • தென்னை விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க வேளாண் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு அரசின் நடவடிக்கையால் வேளாண் பரப்பு 3 லட்சம் ஏக்கர் அதிகரிப்பு.
  • 496 பட்டதாரி இளைஞர்கள், வேளாண் சார்ந்த தொழில்கள் தொடங்க மானியம் வழங்கப்பட்டுள்ளது. 20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
  • தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் மூலம் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.178 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
  • உணவு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 58,000 தரிசு நிலங்கள் சாகுபடி செய்யப்பட்டு வேளாண் நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. உணவு உற்பத்தியை அதிகரிப்பதே இலக்கு.
  •  ’20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சிறுதானியம் பயிரிடப்பட்டது. ரூ.482 கோடியில் குறுவை சாகுபடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது; நடப்பாண்டு 12.48 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது’ 
  • அரசின் தொடர் நடவடிக்கையால் தமிழகத்தில் வேளாண் பரப்பு 3 லட்சம் ஏக்கர் அதிகரித்துள்ளது.
  • எண்ணெய் வித்து பரப்புகளை அதிகரிக்க ரூ.229 கோடி ஒதுக்கீடு: உர விதைகளை வழங்க 1,000 உழவர் நல சேவை மையம் அமைக்கப்படும்.
  • “கடந்த 5 வேளாண்மை நிதி நிலை அறிக்கைகளில் வேளாண்மைத் துறைக்கு ரூ. 1,94,076 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் ரூ.178 கோடி செலவில் 21,35,000 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.
  • கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.707 கோடியில் 61,00,000 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
  • 58,712 ஏக்கர் தரிசு நிலங்கள் விளை நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன.
  • நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் கோயம்புத்தூரில் தொடங்கப்பட்டுள்ளது.
  • நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் மூலமாக 900 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு 70,000 விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன”.



நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *