வைட்டமின் ‘கே’ ஏன் அவசியம் நமக்கு? | Why is Vitamin K important for us?

Spread the love

“‘கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களில் வைட்டமின் கே-வும் ஒன்று. ரத்த உறைதலுக்கு மிகவும் தேவையான ஊட்டச்சத்து இது. வெளிநாடுகளில், வைட்டமின் கே  குறைபாட்டால் பலர் பாதிக்கப்படுகின்றனர்.

இந்தியாவில், நம்  உணவுப்பழக்கம் காரணமாக வைட்டமின் கே தேவையான அளவு கிடைத்துவிடுகிறது. தற்போது, வெளிநாட்டு நுகர்வுக் கலாசாரம் காரணமாக உணவுப் பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், இந்தியர்களுக்கும் வைட்டமின் கே பற்றாக்குறையை அதிக அளவில் ஏற்படுத்திவருகிறது” என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷியன் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.

வைட்டமின் கே

வைட்டமின் கே
pixabay

”வைட்டமின் ‘கே’ இயற்கையாகவே தாவரங்கள் மற்றும் பாக்டீரியாக்களில் இருந்து கிடைக்கிறது. இதை, வைட்டமின் கே 1, வைட்டமின் கே 2 என இரு வகைப்படுத்தலாம். 

தாவரங்களில் இருந்து கிடைக்கும்  பைலோகுயினோன் (Phylloquinone) ‘வைட்டமின் கே 1’ என்றும், விலங்கினங்களில் பாக்டீரியாக்களில் இருந்து கிடைக்கும்  மெனாகுயினோன் (Menaquinone) ‘வைட்டமின் கே 2’ என்றும் வகைப்படுத்தப்படுகின்றன. 

நமது வயிற்றில் நன்மை செய்யக்கூடிய பாக்டீரியாக்கள் உள்ளன. இவை, மெனாகுயினோன் எனும் வைட்டமின் கே 2-வை உற்பத்தி செய்கின்றன.  வைட்டமின் கே 1, வைட்டமின் கே 2 இரண்டுமே  மனிதர்களுக்கு அவசியம் தேவையான வைட்டமின்களே.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *