பிரபல இயக்குநர் வெர்னர் ஹெர்சாக் 2007-ஆம் ஆண்டு இயக்கிய “Encounters at the End of the World’ ஆவணப்படத்தின் காட்சிதான் தற்போது இணையத்தில் பயங்கரமாக வைரலாகியிருக்கிறது.
பென்குயின்கள் பற்றிய அந்த ஆவணப்படத்தில், கூட்டமாகச் சேர்ந்து பென்குயின்கள் மற்றொரு இடத்திற்குப் பயணிக்கின்றன.
ஆனால், அந்தக் கூட்டத்திலிருந்து ஒரு பென்குயின் மட்டும் தனியாக விலகி நிற்கிறது. பிறகு, கூட்டமாகச் செல்லும் பென்குயின்களைத் தவிர்த்து மிக நீண்ட தூரத்திலுள்ள ஒரு மலையை நோக்கிச் செல்லத் தொடங்குகிறது.
அந்த மலையிலிருந்து பென்குயினை அழைத்து வந்தாலும், மீண்டும் அந்த மலையை நோக்கியே செல்ல விரும்பும் என அந்த ஆவணப்படத்தில் இயக்குநரும் சொல்லியிருக்கிறார்.
மரணித்துப் போவோமெனத் தெரிந்தும் ஏன் அந்தப் பென்குயின் மலையை நோக்கிச் செல்கிறது என்கிற கேள்விதான் இந்தக் காணொளியை இத்தனை வைரலாகச் செய்திருக்கிறது.