அவரிடம் நாம் பேசுகையில், “வணக்கம்ங்க! ரொம்ப நிறைவாக இருக்கு. நாங்க செய்த ஏ.ஐ எடிட்ஸ் இப்போ சமூக வலைதளப் பக்கங்கள்ல வைரலாகப் போயிட்டு இருக்கு.” என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவரிடம் அவரைப் பற்றிக் கேட்டோம்.
என்னுடைய பெயர் ஹரிஹரன், சென்னையில்தான் வசிக்கிறேன். இப்போ நான் “Hoohoocreations80’னு ஒரு டிஜிட்டல் மார்கெட்டிங் நிறுவனத்தையும் நடத்தி வர்றேன்.
ஏ.ஐ இன்னைக்கு முக்கியமானதாக மாறியிருக்கு. அதை நேர்மறையாக என்னுடைய கரியருக்கும் பயன்படுத்திக்குவேன்.
கடந்தாண்டுதான் ஏ.ஐ சார்ந்த எங்களுடைய நிறுவனத்தைத் தொடங்கினோம். மக்களுக்கு ஏ.ஐ பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தணும்ங்கிறதுதான் எங்களுடைய நோக்கமாக இருக்கு.
நாங்க இன்ஸ்டாகிராமை எங்களுடைய மார்கெட்டிங் வேலைகளுக்கான கருவியாகப் பயன்படுத்திட்டு வர்றோம். அதுலதான் ஏ.ஐ எடிட்ஸ் பதிவுகளும் போட்டு வர்றோம்.
இப்போ வைரலாகி இருக்கிற இந்த ஏ.ஐ புகைப்படங்களை கூகுள் ஜெமினி, நானோ பனானா ப்ரோ டூலைப் பயன்படுத்திதான் உருவாக்கினோம்.
நானோ பனானா ரொம்பவே ரியலாக போட்டோஸை உருவாக்கித் தருது. சினிமாத் துறை தொடங்கி பல இடங்களிலும் இதே டூல்தான் பயன்படுத்தப்படுது.
ரொம்பவே ரியலிஸ்டிக்காக ரிசல்ட் கொடுக்குது. சொல்லப்போனால், இந்த ஏ.ஐ எடிட்டிற்குப் பின்னாடி பெரிய கதைகளெல்லாம் கிடையாது.
நம்ம அன்றாட வாழ்க்கையில செய்யுற விஷயங்களை சினிமா பிரபலங்கள் செய்தால் எப்படி இருக்கும்னு யோசிச்சு செய்ததுதான். அந்தக் கற்பனைக்குதான் இப்போ ஏ.ஐ மூலமாக வடிவம் தந்திருக்கோம்.