ஶ்ரீவில்லிபுத்தூர்: வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை; தண்ணீர் வாளியில் விழுந்து உயிரிழப்பு!

Spread the love

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வழி விடு முருகன் கோயில் உள்ளது. அந்தக் கோயில் பின்புறம் வசித்து வருபவர் சுரேஷ்குமார். இவர் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 2 வயதில் கிருத்வீகா முத்ரா என்ற பெண் குழந்தை உள்ளது. வழக்கம்போல் அவர் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் மனைவியும், குழந்தையும் இருந்துள்ளனர். சுரேஷ்குமாரின் மனைவி பக்கத்து தெருவில் பால் வாங்க குழந்தையை வீட்டில் தனியாக விட்டு சென்றிருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அவரது இரண்டு வயது மகள் வீட்டு பாத்ரூமில் வாளியில் இருந்த தண்ணீரில் தலைகீழாக இருந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி நத்தம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

கிருத்வீகா முத்ரா

பரிசோதனை செய்த மருத்துவர் முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் மருத்துவமனையில் மருத்துவர் குழந்தையை பரிசோதித்தபோது இறந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக சுரேஷ்குமார் நத்தம்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகார் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு வயது குழந்தை இறந்தது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு வயது குழந்தை பாத்ரூமில் இருந்த வாளியில் விழுந்து இறந்த சம்பவம் நத்தம்பட்டி பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *