ஷாக் மேல் ஷாக் கொடுக்கும் தங்கம்: இன்றும் சவரனுக்கு ரூ.1280 குறைவு – Kumudam

Spread the love

சென்னையில் தங்கம் விலை இந்த வாரம் தொடக்கம் முதலே குறைந்த வண்ணம் உள்ளது. கடந்த மாா்ச் 2-இல் பவுனுக்கு ரூ.920, மாா்ச் 3-இல் பவுனுக்கு ரூ.1,560 குறைந்தது. மார்ச் 4 -இல் பவுனுக்கு ரூ.2,120 குறைந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.15,120-க்கும், பவுனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1.20,960-க்கும் விற்பனையனது. 

ஆனால், வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.295-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.95 லட்சத்துக்கும் விற்பனையானது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.160 குறைந்து ரூ. 14,960க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.290க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை சரிவை சந்தித்து வருகிறது. சவரனுக்கு ரூ.6520 குறைந்துள்ளது. ஈரான், இஸ்ரேல் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருவது நகைப்பிரியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *