இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நடிகர் ஷாருக்கனை இயக்கியுள்ளார்.
ஜவான், டங்கி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் தற்போது கிங் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆக்சன் படமாக இது உருவாகி வருகிறது.
இப்படப்பிடிப்புக்கு இடையே விளம்பரம் ஒன்றில் நடித்திருக்கிறார். பிரபல குளிர்பான நிறுவனத்திற்காக எடுக்கப்பட்ட இந்த விளம்பரத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.