ஸ்கூட்டர் டிக்கிக்குள் பச்சிளம் குழந்தை – பேரதிர்ச்சியூட்டும் தாயின் செயல்.. கொதிக்கும் இணையவாசிகள்!

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியரில் அரங்கேறியுள்ள இந்த நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம், ஒட்டுமொத்த இணையதளத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு தாய் தன்னுடைய பச்சிளம் குழந்தையை ஸ்கூட்டரின் இருக்கைக்கு அடியில் உள்ள “ஸ்டோரேஜ் பாக்ஸ்’ (Boot Space) எனப்படும் சிறிய பெட்டிக்குள் வைத்து மூடி, வண்டியை ஓட்டிச் சென்ற வீடியோ வெளியாகி பெரும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.

ஹெல்மெட் மற்றும் பொருட்களை வைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட அந்த மிகச்சிறிய, காற்று புகாத இடத்திற்குள் ஓர் உயிரை அடைத்து வைத்தது எத்தகைய ஆபத்தானது என்பதை அந்தப் பெண் உணரவில்லை என்பதுதான் இங்கு வேதனையான விஷயம்.

இந்தக் கொடூரச் செயல் அங்கிருந்த ஒரு நபரால் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண் சாலையோரம் வண்டியை நிறுத்தி, இருக்கையை உயர்த்தி உள்ளே இருந்த குழந்தையை வெளியே எடுப்பது அந்த வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவரிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் அளித்த பதில் இன்னும் கொடுமையானது.

“குழந்தை வண்டியில் அமர மறுத்து அடம் பிடித்தது, அதனால்தான் உள்ளே வைத்தேன்” என்று எவ்வித குற்ற உணர்ச்சியுமின்றி மிகவும் சாதாரணமாகப் பதிலளித்துள்ளார். அந்த நபர் எச்சரித்த பின்பும், அதைப் பொருட்படுத்தாமல் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *