கேரள மாநிலத்தில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண், திடீரென பிரேக் பிடித்து நின்றதால், முதல்வர் பினராயி விஜயனின் கான்வாய் வாகனங்கள் விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் கேரள முதல்வர் சென்ற கார் மற்றும் 5 பாதுகாப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : கேரளம்: கோயில் திருவிழாவில் தீ விபத்து! 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
திருவனந்தபுரத்தின் எம்சி சாலையில் இருந்து அட்டிங்கல் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண், திடீரென்று நடுரோட்டில் பிரேக் பிடித்து வலதுபுறம் திரும்ப முயற்சித்துள்ளார்.
அப்போது, அவ்வழியாக சென்ற முதல்வர் பினராயி விஜயனின் பாதுகாப்பு வாகனம், அந்த பெண் மீது மோதுவதை தவிர்ப்பதற்காக பிரேக் பிடித்து நிறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், தொடர்ந்து வந்த மற்ற பாதுகாப்பு வாகனங்கள், முதல்வரின் கார் மற்றும் ஆம்புலன்ஸ் என வரிசையாக அனைத்து வாகனமும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
எனினும், இந்த விபத்தில் பினராயி விஜயன் உள்பட யாருக்கும் பெரிய அளவிலான காயங்கள் ஏற்படவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, ஸ்கூட்டி பெண்ணால் நேர்ந்த விபத்தின் சிசிடிவி காணொலி இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.