இளன் இயக்கத்தில் நடிகர் கவின், லால், அதிதி போஹங்கர் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ள திரைப்படம் ஸ்டார். சிறுவயதில் இருந்தே சினிமா கனவுகளுடன் வளரும் நடிகராக போராடும் ஒரு இளைஞனின் கஷ்டமான வாழ்க்கையை படத்தின் கரு.
இதில் கலை என்கிற கதாபாத்திரத்தில் கவின் நடிக்காமல் வாழந்து உள்ளார் என்றே கூறவேண்டும். அப்படி ஒரு நடிப்பு. ஸ்டில்ஸ் பாண்டியன் கதாபாத்திரத்தில் லால் பக்கபலமாக நடித்து இருக்கிறார். கவினின் அம்மா கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் நடித்துள்ளார்.
பாசக்கார அப்பாவாக லால்
தன்னால் சாதிக்க முடியாததை தனது மகனை வைத்து சாதிக்கத் துடிக்கும் பாசக்கார அப்பாவாக லால் கடைசி வரை சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். ஒரு விபத்து காரணமாக முகத்தில் காயம் ஏற்பட நடிகராகும் கனவு சுக்குநூறாக உடைகிறது. குடும்பத்துக்காக வேலைக்கு செல்லும் கவின் கடைசியில் ஹீரோவானாரா? இல்லையா? என்பது தான் இந்த ஸ்டார் படத்தின் மீதிக்கதை .
அஜித்தின் நடிப்பில் வெளியான முகவரி படத்தில் சாயல் அப்படியே உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து உள்ளனர். படத்தின் தொடக்கத்தில் பள்ளி மாணவனாக சைக்கிளில் வந்து கெத்தாக இறங்கும் காட்சியில் இருந்து முதல் பாதி முழுவதும் வரும் ஒவ்வொரு பாடலிலும் அழகான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் கவின். பின்னர் இரண்டாம் பாதியில் வீட்டில் முடங்கி கிடக்கும் காட்சிகளும் கவினின் நடிப்புக்கு கிடைத்த பசி ஆகும். அந்த அளவுக்கு அந்த கதாபாத்திராமாகவே வாழந்து இருக்கிறார்.
2 காதல் கதைகள்
கவின் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இருவரும் தான் படத்தை தூக்கிப்பிடிக்கும் நலை உள்ளது. விறுவிறுப்பான கதையில் இடையில் கவினுக்கு கல்லூரி பருவத்தில் ஒரு காதல், கல்லூரியை முடித்த அவனை தேடி வரும் ஒரு காதல் என 2 காதல் கதைகள் வருகின்றன. இது ரசிகர்களை சோர்வடைய செய்து உள்ளது.
படத்தில் இரண்டு நாயகிகளும் கொடுத்த வேலையை செய்திருந்தாலும் அவர்கள் வரும் காட்சிகள் எல்லாமே ரசிகர்களை சோர்வடையத்தான் வைக்கின்றன. கதையை விட்டு வேறு எங்கேயோ படம் செல்வது போன்ற எண்ணம் ஏற்படுகிறது. ஸ்டார் மின்னுமா? பொறுத்து இருந்து பார்க்கலாம்.