`ஸ்டாலினை அரசியலில் உருவாக்கியவர் 'நான்' இல்லை; இந்திரா காந்தி' – கருணாநிதியே சொல்கிறார் |Vote Vibes

Spread the love

பிப்ரவரி 1, 1976.

உள்நாட்டுப் பாதுகாப்பு பரமாரிப்புச் சட்டத்தின் (MISA) கீழ் கைது செய்யப்பட்டார் தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்.

திருமணமான கிட்டத்தட்ட ஐந்து மாதங்களிலேயே கைது செய்யப்பட்டார் அவர்.

அதன் பிறகு, சுமார் ஓராண்டிற்கு பிற்கு, 1977-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார் ஸ்டாலின்.

இந்த இடைப்பட்ட காலங்களில் அடி, உதை, சித்ரவதை என பல கொடுமைகள் சிறையில் ஸ்டாலினுக்கு நடந்துள்ளன.

இந்த எமெர்ஜென்சி காலம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் அமல்படுத்தப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்திரா காந்தி
இந்திரா காந்தி

1980-களில் ஜூனியர் விகடனில் வந்த ஒரு பேட்டி…

அதில் ஸ்டாலினைப் பேட்டிக் காண கோபாலபுரம் சென்றிருக்கிறார் விகடன் நிருபர்.

அப்போது தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கூறியதாவது…

“எல்லோரும் ஸ்டாலினை நான் உருவாக்குவதாகச் சொல்கிறார்கள். அது தவறு. நான் உருவாக்கவில்லை. அவனை உருவாக்கி விட்டதே இந்திரா காந்தி தானே!

பேசாமல் கிடந்த அவனை, மிசா கைதி ஆக்கிச் சிறையில் போட்டு, அரசியலில் அவனை உருவாக்கியதே இந்திராகாந்தி தானே” என்று சொல்லியிருக்கிறார்.

இது இப்போது…

2017-ம் ஆண்டு கோவையில் நடந்த இந்திரா காந்தி நூற்றாண்டு நிறைவு விழாவில் ஸ்டாலினும், “ஒரு வகையில் நான் தீவிர அரசியலுக்கு வரக் காரணமானவர் இந்திரா காந்தி” என்று அதே கருத்தைக் கூறியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *