“ஸ்டாலின் எவ்வளவு இடம் கொடுத்தாலும் அது நமக்குப் போதும்!’’ மணி சங்கர் அய்யர் அதிரடி பேட்டி | manishankar aiyar interview on dmk congress alliance

Spread the love

“தமிழகத்தில் கூட்டணி விவகாரத்தில் நடக்கும் குழப்பங்களை எப்படி பார்க்கிறீர்கள்?”

“என்னுடைய அபிப்பிராயம் திமுக-வுடனான இந்தக் கூட்டணி வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. அதைவிட்டுவிட்டு, நமக்கு கூடுதலாக சீட் கிடைக்கும். நமக்கும் மந்திரி பதவி கிடைக்கும் என்கிற நப்பாசையில் ஒரு நடிகர் பின்னால் போக வேண்டும் என்று  சிலர் நினைக்கிறார்கள். அதற்கு முதலில் விஜய் வெற்றிபெற வேண்டும.

அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஜெயலலிதா இவர்கள் எல்லோரும் சினிமாவில் இருந்துதான் அரசியலுக்கு வந்தார்கள் என்கிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால் அவர்களெல்லாம் அரசியலுக்காக சினிமாவை உபயோகப்படுத்தினார்கள்.

ஆனால், மாறாக யாரெல்லாம் நடிகரா இருக்கிற காரணத்தினாலே அரசியலுக்கு வந்தார்களோ அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. சிவாஜி கணேசன் தொடங்கி விஜயகாந்த், கமலஹாசன் வரைக்கும் வரலாறு அப்படித்தான் இருக்கிறது. நடிகர் விஜய்யும் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வர விரும்புகிறார். அவர் வெற்றி பெறுவதற்கான சாத்தியமில்லை.”

 மணி சங்கர் அய்யர்

மணி சங்கர் அய்யர்

“அதிக சீட், ஆட்சியில் பங்கு என்கிற கருத்தை முன்வைத்துதான் கூட்டணி மாற்றம் என்கிற கோரிக்கை முன்னிறுத்தப்படுகிறது. தமிழகத்துக்கு அது ஒத்துவராது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். அதுகுறித்து உங்கள் கருத்து என்ன?”

“ஸ்டாலின் கூறியதை நானும் ஆமோதிக்கிறேன். கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அதுதான் சூழல். ஏனென்றால், காங்கிரஸ் 2014-ல் தனியாக நின்றபோது கார்த்திக் சிதம்பரத்துக்கு ஒரு லட்சம் ஓட்டு கிடைத்தது மற்றவர்களுக்கு ஒரு  50,000 ஓட்டுகள் கிடைச்சது. அப்படியான  சூழ்நிலையில், ஸ்டாலின் எவ்வளவு சீட் கொடுத்தாலும் அது நமக்குப் போதும். ஏனென்றால் அந்த அளவுக்குதான் நம்மால் ஜெயிக்க முடியும்.

ஆனால், இவர்கள் என்ன கனவு காண்கிறார்கள்? நடிகருடன் சென்றால் நமக்கு 100 இடம் கிடைக்கும் 50 மந்திரி கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். உண்மை என்னவென்றால் டெல்லியில் ராகுல் காந்திக்கு தமிழ்நாட்டுடைய ஆதரவு மிகவும் அவசியம். உண்மையாக நீங்கள் தேசபக்தராக இருந்தால் நீங்க நாட்டினுடைய ஒருமைப்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கிறீர்கள் என்றால்  பாஜக-வை தோற்கடிப்பது மிக மிக அவசியம். அதற்கு மு.க ஸ்டாலின்தான் சரியான நபர்.”

“இதை இந்தியா கூட்டணியில் இருக்கும் மற்றத் தலைவர்கள் ஏற்பார்களா?”

“அதை அவர்களைக் கேளுங்கள். என்னுடைய கருத்தைச் சொல்ல எனக்கு உரிமை உண்டு.

மணி சங்கர் அய்யர் பேட்டியை முழுமையாகக் காண கீழே உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்யவும்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *