அ.தி.மு.க. மருத்துவரணி மாநில இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கடந்த நான்கரை ஆண்டுகளில் திமுக ஆட்சியில் எந்த திட்டங்களையும் சரிவரக் கொண்டுவரவில்லை.
ஜெயலலிதா ஆட்சியிலும், எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியிலும் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திமுக அரசு முடக்கியது.

மடிக்கணினி திட்டம், தாலிக்குத் தங்கம், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா சிமெண்ட், குடிமராமத்து உட்பட அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஏராளாமன மக்கள் நலத்திட்டஙகள் அனைத்தையும் முடக்கினார்கள்.
எளிய மக்கள் பயனடையும் வகையில் தமிழகம் முழுவதும் செயல்பட்ட 700-க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் படிப்படியாக மூடப்பட்டன. ஒவ்வொரு மாதமும் 25 லட்சம் மக்களுக்கு பயன்பட்ட இரண்டாயிரம் அம்மா மினி கிளினிக்குகளுக்கு மூடுவிழா நடத்தப்பட்டது.
மக்களைத்தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் மூலம் 2.50 கோடி மக்கள் பலனடைந்ததாக ஸ்டாலின் தம்பட்டம் அடித்து வருகிறார். ஒரு பயனாளிக்கு மருந்து கொடுத்துவிட்டு, அதை மூன்று பேருக்கு கொடுத்ததாக கணக்குக் காண்பிக்கிறார்கள்.