ஸ்டால் ஒதுக்கீடு முதல் கொலாபரேஷன் வரை பிசினஸ் ஸ்கேம்களில் சிக்காமல் இருக்க நீங்கள் செய்ய வேண்டிவை

Spread the love

ஒரு நாட்டின் பொருளாதார முதுகெலும்பு சிறு குறு தொழில்கள்தான். ஆனால் அவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால் மோசடி. டிஜிட்டல் பரிவர்த்தனைகள், ஆன்லைன் மார்க்கெட்டிங், இ-காமர்ஸ் என தொழில் வளர்ந்தாலும், அதனுடன் சேர்ந்து ஸ்கேம்களும் புதிய வடிவம் எடுத்து வருகின்றன.

“ஸ்டால்கள் அமைக்க இடம் தருகிறோம்’ என்பது தொடங்கி, கொலாபரேஷன் வரை ஏகப்பட்ட ஸ்கேம்களை சிறு,குறு தொழில் செய்பவர்கள் சந்திக்கிறார்கள். புதிதாக பிசினஸ் தொடங்கிய எல்லோருக்கும் தனது பிசினஸை வளர்க்க வேண்டும், வாடிக்கையாளர்களை அதிகரிக்க வேண்டும் என்ற பதட்டம் இருக்கும், அந்த பதட்டத்தில் அவசர அவசரமாக செயல்பட்டு சிலர் ஏமாற்றம் அடைகிறார்கள்.

சிறு, குறு  தொழில் செய்பவர்கள் எதில் விஷயத்தில் எல்லாம் அலார்ட்டாக இருக்க வேண்டும் என்று பிசினஸ் ஆலோசகர் சாமுவேல் மேத்யூவிடம் பேசினோம்.

சாமுவேல் மேத்யூ

சாமுவேல் மேத்யூ

பேமென்ட் ஸ்கிரீன்ஷாட் ஸ்கேம் :

‘பணம் அனுப்பிட்டேன்’ என்று போலியான UPI ஸ்கிரீன்ஷாட் அனுப்பி பொருளை எடுத்துச் செல்வது சாதாரண விஷயமாகிவிட்டது. சிறு வியாபாரிகள் நம்பிக்கையால் பொருள் கொடுத்து விட்டு, பணம் வராததை பிறகு தான் அறிகிறார்கள். இதற்கு ஒரே தீர்வு – ஸ்கிரீன்ஷாட்டை நம்பாமல், வங்கி கணக்கில் பணம் வந்து சேர்ந்ததா என்று உறுதி செய்வது நல்லது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *