ஸ்பெயினில் அதிவேக ரயில் விபத்து: 30 பேர் பலி, பலர் காயம்|Horror on Tracks: High-Speed Trains Crash in Spain

Spread the love

ஸ்பெயினில் நேற்று இரவு இரண்டு அதிவேக ரயில்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து தென் ஸ்பெயினில் உள்ள அடமுஸ் நகரத்திற்கு அருகே நடந்துள்ளது.

மலகாவில் இருந்து மாட்ரிட்டிற்குச் சென்று கொண்டிருந்த அதிவேக ரயில் பக்கத்து தண்டவாளத்தில் போய்க்கொண்டிருந்த இன்னொரு அதிவேக ரயில்மீது மோதியுள்ளது.

இதுவரை இந்த விபத்தால் 21 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இன்னும் அதிக உயிரிழப்புகள் இருக்கலாம் என்று ஸ்பெயின் அதிகாரிகள் கூறுகின்றனர்.

விபத்தான ரயில்

விபத்தான ரயில்
X | Video

இந்த விபத்து குறித்து ஸ்பெயினின் போக்குவரத்து அமைச்சர் ஆஸ்கார் புவென்ட், “இந்த விபத்து மிகவும் விசித்திரமாக உள்ளது. காரணம், தண்டவாளம் மிக நன்றாக உள்ளது. ஸ்ட்ரைட்டாக உள்ளது. கடந்த மே மாதம்தான், இந்தத் தண்டவாளம் புதுப்பிக்கப்பட்டது” என்று கூறியுள்ளார்.

இந்த இரண்டு ரயில்களும் ஒட்டுமொத்தமாக கிட்டத்தட்ட 400 பயணிகள் பயணித்துள்ளனர்.

இதுவரை கிடைத்துள்ள தகவலின்படி, 73 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 30 பேர் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *