இது குறித்து மின்னணு மற்றும் தொழில் நுட்பத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உலகளாவிய ஸ்மார்ட்போன் மையமாக இந்தியா மாறியுள்ளது. நாட்டில் விற்பனையாகும் 99.2% ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை.
2025 நிதியாண்டின் 11 மாதங்களில், இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி ரூ. 21.29 லட்சம் கோடியாக உயர்ந்து, உலகளவில் தயாரிப்புத் துறையில் இந்தியா மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது.
2014ஆம் ஆண்டு நாட்டின் ஸ்மார்ட்போன் உற்பத்தி 0.2 பில்லியன் டாலர்களாகவே இருந்தது. ஆனால் நடப்பு நிதியாண்டு முடிய இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில், 21 பில்லியன் டாலர் என்ற இலக்கை எட்டியுள்ளது.