ராஜஸ்தானின் ஜாலோர் மாவட்டத்தில் உள்ள 15 கிராமங்கள் சிறுமிகளுக்கு ஸ்மார்ட்போன்களுக்குத் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த கிராமங்களுக்கு பரவலாக எதிர்ப்பு எழுந்தது. அதைத் தொடர்ந்து அந்த கிராமங்கள் தங்கள் தடை முடிவை திரும்பப் பெற்றன. மேலும் கிராமத் தலைவர்கள், “தங்களின் இந்த முன்மொழிவு தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விட “சீரான சமூக ஒழுக்கத்தை’ மையமாகக் கொண்டது” என விளக்கமளித்தனர்.
இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தின் பாக்வத் மாவட்டத்தில் உள்ள பல பஞ்சாயத்துகளின் தலைவர்கள், சிறுவர்கள் ஸ்மார்ட்போன் வைத்திருப்பதற்கும், அரைக்கால் சட்டை அணிவதற்கும் கட்டுப்பாடுகள் விதித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
தொடர்பாக அவர்கள் நிறைவேற்றியிருக்கும் தீர்மானத்தில், “சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் ஒரே மாதிரியான சமூக விதிகள் பொருந்த வேண்டும். சிறுவர்கள் வீட்டிலும் பொது இடங்களிலும் அரைக்கால் சட்டை அணிவதற்குப் பதிலாக, கால்சட்டை அல்லது பாரம்பரிய குர்தா-பைஜாமா போன்ற சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆடைகளை அணிய வேண்டும். அரைக்கால் சட்டை அணிவது உள்ளூர் மரபுகளுக்கு எதிரானது. மேலும், 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கைபேசிகள் வழங்கப்படக் கூடாது.