ராகுல்காந்திக்கு கடும் சவால்விட்ட பா.ஜனதா வேட்பாளர் ஸ்மிருதி இராணிஉத்திர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் தோல்வியை தழுவி உள்ளார்.
அவர் 1 லட்சத்து 67 ஆயிரத்து 196 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ்வேட்பாளர் சோனியா காந்தி குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான கிஷோர் லால் 5 லட்சத்து 39 ஆயிரத்து 228 வாக்குகள்பெற்று அபார வெற்றி பெற்றார்.
ஆந்திரா-ஒடிசா சட்டசபை தேர்தல்
ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து சட்டசபைக்கும்தேர்தல் நடைபெற்றது. அங்கு ஆட்சியில் உள்ள ஒய்.எஸ்.ஆர்.காங்கரசின் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சிக்கு முடிவு கட்டி சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்து உள்ளது.
மொத்தம் உள்ள 175 சட்டசபை தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 134 இடங்களை பெற்று அசத்தி இருக்கிறது. ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கரஸ் வெறும் 12 தொகுதியிலும், பா.ஜனதா கட்சி 8 இடங்களையும், பவன்கல்யானின் ஜனசேனா கட்சி 21 இடங்களையும் பிடித்து உள்ளன.
பாராளுமன்ற தொகுதி
இதேபோல் ஆந்திரா மாநிலத்தில் உள்ள 25 பாராளுமன்ற தொகுதிகளில் தெலுங்குதேசம் கட்சி 16 இடங்களை கைப்பற்றி உள்ளது. ஒய்.எஸ்.ஆர்.காங்கரஸ் 4 இடங்களும், பா.ஜனதா 3 இடங்களையும், ஜனசேனா கட்சி 2 இடத்தையும் பிடித்து உள்ளது.
மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்த சந்திரபாபு நாயுடு மத்தியில் என்ன நிலைப்பாடு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. கர்நாடகாவில் 28 மக்களவை தொகுதிகளில் பாஜக 17 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும், ஜனதாதளம் (எஸ்) 2 தொகுதியையும் பிடித்து உள்ளன.
ஒடிசா மாநில சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் பா.ஜனதா 78 தொகுதிகளை பிடித்து ஆட்சியை பிடித்து உள்ளது. பிஜு ஜனதா தளம் 51 இடங்களையும், காங்கிரஸ் 14 இடங்களையும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி 1 இடத்தையும் பிடித்து உள்ளன. ஒடிசாவில் உள்ள 21 பாராளுமன்ற தொகுதியில் 19 இடங்களை பா.ஜனதா அள்ளி இருக்கிறது. இங்கு காங்கிரஸ் ஒரு இடத்தையும்,பிஜு ஜனதா தளம் ஒரு இடத்தையும் கைப்பற்றி உள்ளன.
தமிழகம்
தமிழகம்-புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளையும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அப்படியே கைப்பற்றி உள்ளது. பா.ஜனதா, அ.தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வில்லை. நட்சத்திர வேட்பாளர்களான தமிழக பா.ஜனதா வேட்பாளர் அண்ணாமலை, எல்.முருகன், நைனார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தரராஜன், நடிகை ராதிகா ஆகியோர் தோல்வியை தழுவினர்.
பா.ம.க. வேட்பாளர் சவுமியா அன்புமணி மற்றும் தே.மு.தி.க. வேட்பாளரும் மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகனான விஜயபிரபாகரனன் ஆகியோர் கடும் போட்டியிட்டு இறுதியில் தோல்வியை தழுவினர்.
தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட சவுமியா அன்பு மணி 21 ஆயிரத்து 300 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் மணியிடம் தோல்வியை தழுவினார். மணி 4 லட்சத்து 32 ஆயிரத்து 667 வாக்குகளும், சவுமியா அன்பு மணி 4 லட்சத்து 11 ஆயிரத்து 367 வாக்குகளும் பெற்று இருந்தனர்.
விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட விஜயபிரபாகரன் வெறும் 4633 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ்வேட்பாளர் மாணிக்கம் தாகூரிடம் தோல்வி அடைந்தார். மாணிக்கம் தாகூர் மொத்தம் 3 லட்சத்து 82 ஆயிரத்து 876 வாக்குகள்பெற்று வெற்றி அடைந்தார்.
அதே தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட நடிகை ராதிகா 1 லட்சத்து 54 ஆயிரத்து 149 வாக்குகள் மட்டும் பெற்று 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
எல்.முருகன்-அண்ணாமலை
நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட மத்திய மந்திரி எல்.முருகன் 2 லட்சத்து 40 ஆயிரத்து 585 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க.வேட்பாளர் ஆ.ராவிடம் தோல்வியை தழுவினார். ஆ.ராசா மொத்தம் 4 லட்சத்து 73 ஆயிரத்து 212 வாக்குகள்பெற்று அபார வெற்றி பெற்றார்.
கோவை தொகுதியில் போட்டியிட்ட தமிழக பா.ஜனத தலைவர் அண்ணாமலை 1 லட்சத்து 13 ஆயிரத்து 446 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க.வேட்பாளர் கணபதி ராஜ்குமாரிடம் தோல்வியை தழுவினார். கணபதி ராஜ்குமார்மொத்தம் 5 லட்சத்து 49 ஆயிரத்து 62 ஓட்டுகள்பெற்று இருந்தார்.
இதையும் படியுங்கள்: 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் மோடி