ஸ்ரீநகரில் கையெறி குண்டு தாக்குதல்: 11 பேர் காயம்

Dinamani2fimport2f20202f12f52foriginal2fsrinagar148b071205.jpg
Spread the love

ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதில் 11 பேர் காயமடைந்தனர்.

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் பிளே மார்க்கெட் அருகே உள்ள சிஆர்பிஎஃப் பதுங்கு குழியை குறிவைத்து பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவத்தில் 11 பொதுமக்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியதுடன், கடைக்காரர்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி அலைந்தனர்.

மாதம் ஒருமுறை மின் கணக்கீடு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்: தவெக

சனிக்கிழமை லஷ்கர்-இ-தொய்பாவின் தளபதி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பயங்கரவாதிகள் விரக்தியில் இந்தத் தாக்குதலை நடத்தியதாக அதிகாரி கூறினார்.

இந்த தாக்குதலுக்கு முதல்வர் உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். அப்பாவி பொதுமக்களை குறிவைப்பதை நியாயப்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *