ஸ்ரீபெரும்​புதூர் ஜீயர் குறித்து அவதூறு: ஸ்ரீரங்கம் ரங்க​ராஜன் டிச.24 வரை சிறை​யில் அடைப்பு | Srirangam Rangarajan confined in jail till Dec 24

1343613.jpg
Spread the love

சென்னை: ஸ்ரீபெரும்​புதூர் ஜீயர் குறித்து சமூக வலைதளங்​களில் அவதூறு பரப்​பியதாக கைது செய்யப்பட்ட ஸ்ரீரங்கம் ரங்க​ராஜன் வரும் 24-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்​பில் கூறப்​படு​வ​தாவது: திருச்சி ஸ்ரீரங்​கத்தை சேர்ந்​தவர் ரங்க​ராஜன் நரசிம்​மன். இவர் அவரது கருத்துகளை முன்வைத்து வீடியோ வெளி​யிடுவதை வழக்​கமாக கொண்​டுள்​ளார். அந்த வகையில் கடந்த வாரம் யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளி​யிட்​டிருந்​தார். அதில், ஸ்ரீபெரும்​புதூர் ஜீயர் சுவாமிகள் குறித்து விமர்சித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, உண்மைக்கு புறம்பாக தன்னைப் பற்றி அவதூறாக திரித்து புனையப்பட்ட உரையாடலை சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஸ்ரீரங்கம் ரங்க​ராஜன் மீது நடவடிக்கை எடுக்​கு​மாறு சென்னை காவல் ஆணையர் அலுவல​கத்​துக்கு ஆன்லைன் வாயிலாக ஸ்ரீபெரும்​புதூர் ஜீயர் சுவாமிகள் தரப்​பில் புகார் அளிக்​கப்​பட்​டது. காவல் ஆணையர் அருண் உத்தர​வின்​பேரில், மத்திய குற்​றப்​பிரிவு சைபர் க்ரைம் போலீ​ஸார் இதுகுறித்து விசாரித்தனர்.

இதையடுத்து, புகாருக்குள்ளான ஸ்ரீரங்கம் ரங்க​ராஜன் மீது 5 பிரிவு​களின் கீழ் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டது. தொடர்ந்து, நேற்று முன்தினம் ஸ்ரீரங்கத்தில் உள்ள அவரது வீட்டில் ரங்க​ராஜனை சென்னை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவரை சென்னை அழைத்து வந்து விசாரித்தனர். இதன் தொடர்ச்சியாக ஸ்ரீரங்கம் ரங்க​ராஜனை எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர்.

அவரை வரும் 24-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதுஒருபுறம் இருக்க ஸ்ரீரங்கம் ரங்கராஜன் வீட்டில் சைபர் க்ரைம் போலீஸார் நேற்று சோதனை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *