திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே குடிநீர் குழாயை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி, திடீரென மண் சரிவு ஏற்பட்டு, அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்தார்.
அவருடன் மண் சரிந்து விழுந்ததில், மண்ணில் புதைந்த அவரை தீயணைப்பு வீரர்கள் பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு பள்ளம் தோண்டி பத்திரமாக மீட்டனர்.
உடனடியாக அவர் முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மண்ணில் புதைந்தவரை தீயணைப்பு வீரர்களுடன் சேர்ந்து பொதுமக்களும் பாதுகாப்பாக மீட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.