ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கைசிக ஏகாதசியை முன்னிட்டு 108 போர்வை சாற்றுதல் சிறப்பு வைபவம் | Kaisika Ekadashi Celebrated at Srivilliputhur Andal Temple; Devotees from Tamil Nadu and Kerala Attend

Spread the love

யாருக்கெல்லாம் போர்வை சாற்றப்படுகிறது:

இங்கு ஆண்டாள், ரங்கமன்னார், பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் ஆகிய அனைவருக்கும் 108 போர்வைகள் சாற்றும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

ஒவ்வொரு திவ்ய தேசத்தையும் குறிக்கும் வகையில் 108 போர்வைகள் சாற்றப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனை முன்னிட்டுச் சிறப்புப் பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன.

108 போர்வை சாற்றுதல்

108 போர்வை சாற்றுதல்

அதிகாலையில் கைசிக புராணம் விரிவாக வாசிக்கப்பட்டது. கார்த்திகை மாதத்தில் சுக்லபட்சத்தில் வரும் கைசிக ஏகாதசி அன்று உப்பில்லாமல் விரதம் கடைப்பிடித்தால் 108 ஏகாதசிகள் கடைப்பிடித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அதிகாலை வேளையிலேயே விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சாத்தூர், அருப்புக்கோட்டை, திருநெல்வேலி, கோவில்பட்டி மற்றும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து இந்த சிறப்பு வைபவத்தைத் தரிசனம் செய்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *