ஸ்ரீ லலிதாம்பிகை மருத்துவ கல்லூரி லலிதாம்பிகை கருவுறுதல் மையத்தின் முதலாம் ஆண்டு விழா|

Spread the love

இந்த விழாவில் பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், தொழிலதிபரும், நடிகையுமான திருமதி.தேவயானி ராஜகுமாரன் மற்றும் தயாரிப்பாளரும், இயக்குனருமான திரு.ராஜகுமாரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு லலிதாம்பிகை கருவுறுதல் மையத்தின் கடந்த ஒரு வருட பயணத்தில் பெற்றோராகும் கனவுகளுடன் சிகிச்சை பெற வந்த தம்பதியினருக்கு அனுபவம் வாய்ந்த மருத்துவ வல்லுநர்களை கொண்டு, அதிநவீன வசதிகளுடன், குறைந்த விலையில் அதி நவீன சிகிச்சை பெற்று உயர் வெற்றி விகிதங்கள், 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன் பெற்றதாக குறிப்பிட்டு, லலிதாம்பிகை கருவுறுதல் மையத்தின் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களை பாராட்டி மேலும், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி விழாவினை சிறப்பித்தார்.

முதலாம் ஆண்டு விழா

முதலாம் ஆண்டு விழா

மேலும் இந்த விழாவில் பல்கலைக்கழக நிர்வாக அறங்காவலர் திருமதி.S.லலிதாலட்சுமி அவர்கள், ஏ.சி.எஸ். மருத்துவக்கல்லூரி செயலாளர் திரு.A.ரவிக்குமார் அவர்கள், பென்ஸ்ஸீ நிர்வாக குழு இயக்குனர் திருமதி.நிர்மலா அருண்குமார் அவர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்.S.கீதாலட்சுமி அவர்கள், பதிவாளர் டாக்டர். C.B.பழனிவேலு அவர்கள், சிறப்பு அலுவலர் முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி திரு.A.ஞானசேகரன் அவர்கள், டீன். டாக்டர். T.பாலசுப்ரமணியன் அவர்கள், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர்.J.கிருஷ்ணமோகன் அவர்கள், கல்லூரி முதல்வர் டாக்டர்.K.M.ஸ்ருதி அவர்கள், லலிதாம்பிகை கருவுறுதல் மையத்தின் இணை இயக்குனர் டாக்டர்.சரண்யா ஹேமந்த் அவர்கள் மற்றும் இணை பதிவாளர் டாக்டர்.S.மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இந்த மகிழ்ச்சியான தருணத்தில் லலிதாம்பிகை கருவறுதல் மையத்தின் ஒரு வருட சாதனையை ஆண்டு மலராக வெளியிட்டு விழாவினை சிறப்பித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *