தமிழில் ‘எங்கேயும் காதல்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஹன்சிகா, அதன்பின் ‘பிரியாணி’, ’சிங்கம் 2’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். 2022இல் ஜெய்ப்பூர் அரண்மனையில் இவருக்கு திருமணம் நடைபெற்றது.
சமீபத்தில், மை 3 வெப் என்ற வெப் தொடரிலும் நடித்து இருந்தார். சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை – 2 படத்தில் பேயாக ஹான்சிகா நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து கார்டியன் படத்திலும் பேயாக நடித்திருந்தார். இது கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
தற்போது காந்தாரி எனும் படத்தில் நடித்துள்ளார். ஆர் கண்ணன் தயாரித்து இயக்கியுள்ளார். மெட்ரோ சிரிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இசை- முத்து கணேஷ். படத்தின் மேக்கிங் விடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்தப் படம் விரைவில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. இதன் டிரைலர் வெளியாகியுள்ளது.