ஹரித்வாரில் தொடர்ந்து அழுததாக கூறி இரட்டைக் குழந்தைகளை தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வார் மாவட்டத்தில் வசித்து வருபவர் மகேஷ் சக்லனி. இவருடைய மனைவி சுபாங்கி. இவர்களுக்கு ஆறு மாத இரட்டைக் குழந்தைகள் இருந்தன. இத்தம்பதியுடைய குழந்தைகளின் திடீர் மரணம் தந்தை மகேஷ் சக்லனிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில், தனது மனைவி கடைக்குச் சென்று பால் வாங்கிவிட்டு திரும்பி வந்தபோது இரண்டு குழந்தைகளும் மயக்கமடைந்திருப்பதைக் கண்டார். உடனே அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு மருத்துவர்கள் குழந்தைகள் இறந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த புகாரையடுத்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.