ஹரியாணாவில் தோல்வியை ஒப்புக்கொண்டது பாஜக: பூபிந்தா் சிங் ஹூடா

Dinamani2f2024 082ff89423f1 D6c4 41b3 9d19 C16052b6ca492fc 53 1 Ch1361 3589222.jpg
Spread the love

ஹரியாணாவில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதன் மூலம் பாஜக தோல்வியை ஒப்புக்கொண்டதாக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபிந்தா் சிங் ஹூடா விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இது தேர்தல் ஆணையத்தின் உரிமை, அதனால் தேர்தல் தேதியை நீட்டித்துள்ளனர். அவர்கள் (பாஜக) ஏற்கெனவே ஹரியாணாவில் தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

ஹரியாணா அரசு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியபோது, ​​பாஜக தோல்வியை ஏற்றுக்கொண்டதாக நான் அப்போது கூறியிருந்தேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து பாஜக தலைவர் அனில் விஜ் கூறுகையில், “தேர்தல் ஆணையத்திற்கு நாங்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். அவர்கள் எங்கள் விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுத்து தேதிகளை மாற்றியுள்ளனர் என்றார்.

ஹரியாணாவின் சட்டப்பேரவைத் தேர்தல், வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்றி தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அதன்படி ஹரியாணா மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 1ஆம் தேதிக்கு பதில் அக்டோபர் 5ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கையும் அக்டோபர் 4ஆம் தேதிக்கு பதில் 8ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஷ்னோய் சமூக மக்கள் கொண்டாடும் 100 ஆண்டுகள் பாரம்பரிய திருவிழா வருவதால், அந்த மக்களின் கோரிக்கையை ஏற்று ஹரியாணாவில் தேர்தல் தேதி மாற்றப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *