ஹரியாணா தேர்தலில் காங்கிரஸ் தோல்வி குறித்து தில்லியில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
ஹரியாணாவில் 90 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த அக். 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 48 தொகுதிகளைக் கைப்பற்றி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது.
காங்கிரஸ் -37, இந்திய தேசிய லோக் தளம் -2, சுயேச்சைகள் -3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
ஆனால், ஹரியாணாவில் காங்கிரஸ் ஆட்சியைப்பிடிக்கும் என்று பெரும்பாலான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறியிருந்தன.