ஹரியாணா: பசக நிர்வாகி சுட்டுக்கொலை!

Dinamani2f2025 01 252fdqjw86f92fbsp.jpg
Spread the love

ஹரியாணா மாநிலம் அம்பலா மாவட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

அம்பலா மாவட்டத்தின் நரயின்கார் பகுதியில் பசக நிர்வாகியான ஹர்பிலாஸ் சிங் ராஜுமஜ்ரா அவரது நண்பர்களான புனித் மற்றும் குகல் ஆகிய இருவருடன், நேற்று (ஜன.24) மாலை அவர்களது காரில் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த இரண்டு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் காரில் இருநதவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இந்த தாக்குதலில் ஹர்பிலாஸ் மற்றும் புனித் ஆகிய இருவரின் மீதும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்தனர். உடனடியாக இருவரும் மீட்கப்பட்டு சண்டிகரிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த ஹர்பிலாஸ் சிங் ராஜுமஜ்ரா நேற்று இரவு பரிதாபமாக பலியானார். படுகாயமடைந்த புனித் தற்போது நலமாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: கஞ்சா சாகுபடிக்கு ஹிமாச்சல அரசு அனுமதி!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *