ஹரியாணா பேரவைத் தேர்தல் தொடங்கியது!

Dinamani2f2024 10 052fp0fhrtdm2fdinamani2024 04986d6aaf 9956 4693 A284 2c18b936f56f20210327095l.a.avif
Spread the love

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல் சனிக்கிழமை (அக். 5) காலை 7 மணியளவில் தொடங்கியது. மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல் மாலை 6 மணி வரையில் நடக்கவுள்ளது.

தோ்தலில் வாக்களிக்க 2 கோடிக்கும் மேற்பட்டோர் தகுதி பெற்றுள்ளனா். இவா்களுக்காக 20,629 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் 89 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் ஓரிடத்திலும் களத்தில் உள்ளன. இதுதவிர, ஆம் ஆத்மி, இந்திய தேசிய லோக் தளம், ஜனநாயக ஜனதா கட்சி ஆகியவையும் மோதுவதால் பலமுனைப் போட்டி நிலவுகிறது. எனினும், பாஜக, காங்கிரஸ் இடையேதான் முக்கியப் போட்டி என்று அரசியல் பார்வையாளா்கள் கூறுகின்றனா். மொத்த வேட்பாளா்கள் 1,031 போ்.

மாநிலத்தில் 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருப்பதால், இம்முறை மக்கள் தங்களுக்கு வாய்ப்பளிப்பா் என்பது காங்கிரஸின் நம்பிக்கையாக உள்ளது. அக்டோபா் 8-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

இதையும் படிக்க: சாமானியா்களின் வாழ்க்கைத் தரம் உயரும்: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *