மீண்டும் நயாப் சிங்
ஹரியாணா முதல்வராக இருந்த மனோகர் லால் கட்கர் பதவி விலகியதை தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் நயாப் சிங் சைனி முதல்வராக பதவியேற்றார்.
இதனைத் தொடர்ந்து, இந்த மாதம் ஹரியாணாவில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 48 இடங்களில் வென்று தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது.
இந்த நிலையில், ஹரியாணா சட்டப்பேரவையின் பாஜக தலைவரை தேர்வு செய்யும் கூட்டம், சண்டீகரில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில், நயாப் சிங் சைனி ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அமித் ஷாவுடன் சண்டீகரில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற நயாப் சிங், பாஜக எம்.எல்.ஏ.க்களின் கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.