இந்த சம்பவம் குறித்து, ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனி “பெண்கள், ஏழைகள், தலித்துகள் உள்பட யாரையும் காங்கிரஸ் கட்சியினர் மதிப்பதில்லை. இது அவர்களின் கலாசாரத்திலும் டி.என்.ஏ.விலும் உள்ளது. இந்த சம்பவம் குறித்து, யாரேனும் புகார் அளித்தால், நாங்கள் நடவடிக்கை எடுப்போம். எங்கள் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்; தவறிழைத்த யாரையும் காப்பாற்றாது. பெண்கள் சமூகத்தின் ஒருங்கிணைந்த அங்கம்’’ என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் குமாரி செல்ஜா “நான் அந்த பெண்ணிடம் பேசினேன். ஒருவர் அவரைத் தொட்டு, மேடையில் இருந்து அகற்ற முயற்சிப்பதாகக் கூறினார். விடியோவிலும் அதையே பார்த்தோம். யாரோ தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் கூறினார். ஒரு பெண்ணுக்கு இதுபோன்ற சம்பவம் நடந்தால், அது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.
மேலும், இந்த சம்பவத்தை பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஷாத் பூனவல்லா கண்டித்ததுடன், “தீபேந்தர் ஹூடா முன்னிலையிலேயே மேடையில் காங்கிரஸ் தலைவர்களால் ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த செய்தி அறிக்கைகள் மற்றும் குமாரி செல்ஜாவும் உறுதிப்படுத்தியுள்ளார். பகல் நேரத்திலேயே பொது இடங்களில், காங்கிரஸ் கூட்டங்களில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்றால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியுமா?’’ என்று கூறியுள்ளார்.