மதுரையில் திமுகவின் வாக்குசாவடி முகவர்களுக்கான தெற்கு மற்றும் மதுரை மண்டல பயிற்சி மாநாடு இன்று நடக்க இருக்கிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
இதற்காக ஒத்தகடையில் 1 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட் செட் அமைக்கப்பட்டிருக்கிறது. கூட்ட அரங்கில் நுழைவதற்கு மூன்று வழிகள் அமைத்து தார் சாலை போடப்பட்டிருகிறது.
இதில் கலந்து கொள்ளும் முகவர்களுக்கு பெரிய பெரிய அண்டாக்களில் சுட சுடமட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி தயார் செய்யப்பட்டு வருகிறது.

மொத்தம் 15 சமையலாளர்கள் டீம் உணவு தயாரிப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வழக்கமாக பிரியாணிகள் பொட்டலங்களில் தான் கொடுப்பார்கள். இந்த முறை ஹாட்பாக்ஸ்களில் பிரியாணிகளை அடைத்து கொடுக்க இருக்கின்றனர்.

இந்த ஹாட்பாக்ஸ்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படங்கள் அச்சடிக்கப்பட்டிருக்கின்றன.
