இதற்குக் காட்டமாகப் பதில் சொன்ன அஸ்வின், “ஒரே ஒரு கேள்வி நான் நேர்மையாகக் கேட்டால், நீங்க பதில் சொல்வீங்களா? அப்போ, 40 கதைகள் என்பது நான் பொதுவாகச் சொன்ன ஒரு எண்ணிக்கை.
அதுக்கு அதிகமாகவும் கதைகள் நான் கேட்டிருக்கலாம். இன்னைக்கு நீங்க அத்தனை கதைகள் கேட்டாலும், தூங்காமல் இருந்திருப்பீங்களா?
தியேட்டர்லேயே நான் பார்க்கும்போது, பலர் தூங்கிட்டு இருக்காங்க. அப்போ நான் யாரையும் புண்படுத்தணும்னு பேசவே இல்ல.
அப்போவே அதுக்கான விளக்கம் கொடுத்திருந்தேன். இப்போ, படத்துக்காக வரும்போது என்னை நீங்க குத்துறதுக்குப் பார்த்துட்டிருக்கீங்க. ப்ராப்பர் நடிகர்னு என்னை நான் சொல்ல மாட்டேன்.
நான் இப்போ கத்துகிட்டுதான் இருக்கேன். நான் வேலை பார்க்கிற அத்தனை இயக்குநர்களிடமிருந்து நிறைய விஷயங்களைக் கத்துகிட்டிருக்கேன். நான் ஒரு நல்ல நடிகனாக முயற்சி பண்றேன்” எனக் கூறினார்.