ஹாத்ரஸ் சம்பவம்: 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

Dinamani2f2024 072f8a72af9a 5327 496c 8738 991f94ffe6e22fpti07 02 2024 000441b.jpg
Spread the love

உத்தர பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 116 பேர் உயிரிழந்த சம்பவத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய குற்றவியல் சட்டங்களான பிஎன்எஸ் 105, 110, 126(2), 223 மற்றும் 238 ஆகிய பிரிவுகளின் கீழ் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

ஆன்மிக நிகழ்ச்சி நடைபெற்ற பகுதியில் மோப்ப நாய் உதவியுடன் தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.

உத்தர பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் மாவட்டத்தின் புல்ராய் கிராமத்தில் உள்ள திறந்தவெளி மைதானத்தில், “போலே பாபா’ என்ற ஆன்மிக குருவின் சொற்பொழிவு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தனியார் சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

மாலையில் நிகழ்ச்சி முடிந்து, மைதானத்தைவிட்டு மக்கள் கிளம்பும்போது கடும் நெரிசல் ஏற்பட்டது. “போலே பாபா’விடம் ஆசி பெறவும், அவரது காலடி மண்ணை சேகரிக்கவும் மக்கள் முண்டியடித்தபோது நெரிசல் ஏற்பட்டு, ஒருவர் மீது மற்றொருவர் விழுந்தனர்.

இதில், 108 பெண்கள், 7 குழந்தைகள், ஒரு ஆண் என 116 பேர் உயிரிழந்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *