ஹாய் ஜாலி ! தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி: சவரனுக்கு ரூ 400 குறைவு – Kumudam

Spread the love

நேற்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 1,02,960 விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ. 40 உயர்ந்து, ஒருகிராம் தங்கம் ரூ. 12,870-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போன்று இன்று வெள்ளி கிராமுக்கு ரூ. 12 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.283-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிலோவிற்கு ரூ.12,000 உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,83,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.  

மாலையில் தங்கம் சவரனுக்கு ரூ.560 குறைந்தது. சவரன் ரூ, 1.02,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ. 70 குறைந்து  கிராம் ரூ.12,800 விற்பனை செய்யப்பட்டது. இதே போன்று வெள்ளியும் கிராமுக்கு ரூ 6 குறைந்து, கிராம் ரூ .277-க்கு விற்பனை ஆகினது. கிலோவிற்கு 6 ஆயிரம் குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.2,77,000 விற்பனை செய்யப்பட்டது. 

இன்றைய தினம் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,02,000க்கு விற்பனை ஆகிறது. ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.50 ஒரு கிராம் ரூ.12,750க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.272க்கும் கிலோவுக்கு ரூ.5000 குறைந்தது, கிலோ வெள்ளி ரூ.1,02,000  விற்பனை ஆகிறது. சற்றே குறைந்து வரும் தங்கம், வெள்ளி விலையால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *