Doctor Vikatan: என் நண்பனுக்கு 60 வயது. அவருக்குச் சமீபத்தில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு மருத்துவமனையில் அட்மிட் செய்து சிகிச்சை அளித்துக் காப்பாற்றினோம். அப்போது அவர், தனக்கு ஏற்பட்ட அறிகுறிகள் ஒரு மாதமாகவே தொடர்வதாகச் சொன்னார்.
திடீரென அதிகமான பிறகுதான் பயம் வந்து மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார். அப்படி ஒரு மாதம் முன்பே அவர் உணர்ந்த அறிகுறிகள், ஹார்ட் அட்டாக்கின் அறிகுறிகள்தான் என்று மருத்துவர்கள் சொன்னார்கள்.
ஹார்ட் அட்டாக்கின் அறிகுறிகள் பொதுவாக உடனே உணரப்படும், அடுத்து அதிகமாகும், தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும் என்றுதானே சொல்வார்கள்… இப்படி ஒரு மாதம் முன்பேகூட அறிகுறிகளைக் காட்டுமா ஹார்ட் அட்டாக்… இதை எப்படிப் புரிந்துகொள்வது?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்.
பல நேரங்களில் நமக்கு இதய நோயின் அறிகுறிகள் அல்லது மாரடைப்பின் (Heart Attack) அறிகுறிகள் என்று பார்த்தால், நெஞ்சுப்பகுதியில் ஒருவித அழுத்தம் மற்றும் இடது கையில் வலி என்றே பலரும் சொல்வதைக் கேட்டிருப்போம். இவை மிகவும் பொதுவான (Classic) அறிகுறிகள்.