விடாமுயற்சி திரைப்படத்தின் டீசர் பிரபல ஹாலிவுட் படத்தின் கதையை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
‘மங்காத்தா’ திரைப்படத்துக்குப்பின் அஜித், த்ரிஷா, அர்ஜுன் இணைந்து ‘விடாமுயற்சியில்’ நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
மகிழ் திருமேனியின் இயக்கத்தில் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படமாக ‘விடாமுயற்சி’ உருவாகியிருக்கிறது.
இதையும் படிக்க: சீனாவில் மகாராஜா முதல் நாள் வசூல்!
ஆனால், டீசர் காட்சிகளையும் ஒளிப்பதிவையும் பார்த்தால் 1997 ஆம் ஆண்டில் வெளியாகி வெற்றிபெற்ற பிரேக்டவுன் (breakdown) என்கிற படத்தின் தழுவல்போல் தெரிகிறது.
கணவனும் மனைவியும் சாலை பயணத்தை மேற்கொள்கின்றனர். திடீரென மனைவி காணாமல்போக நாயகன் அவரைத் தேடிக் கண்டுபிடிக்கும் கதையாக பிரேக்டவுன் உருவானது. குறைவான கதாபாத்திரங்களில் விறுவிறுப்பான திரைக்கதையால் ரசிகர்களைக் கவர்ந்த படம்.
விடாமுயற்சியும் அப்படியே இருப்பதால் ரசிகர்களிடம் ஆவல் எழுந்துள்ளது.