புதுதில்லி: முன்னணி மின்சார மின்னணு உபகரணங்கள் மற்றும் ரயில் போக்குவரத்து உபகரண உற்பத்தியாளரான ஹிண்ட் ரெக்டிஃபையர்ஸ், அதிக ஆர்டர் பெற்றதன் பெயரிலும், அதன் செயல்பாட்டுத் திறன் காரணமாகவும் 2025-26 ஜூன் வரையான காலாண்டில் வரிக்குப் பிந்தைய லாபமாக 85.5% உயர்ந்து ரூ.12.8 கோடியாக உள்ளதாக அறிவித்துள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் செயல்பாடுகளிலிருந்து கிடைக்கும் வருவாய் 58.5 சதவிகிதம் உயர்ந்து ரூ.214.8 கோடியாக உள்ளது. இதுவே 2025ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இது ரூ.135.5 கோடியாக இருந்தது.
இந்திய ரயில்வே இடமிருந்து இந்த காலாண்டில் ரூ.327 கோடி மதிப்புள்ள ஆர்டர்கள் பெற்றதன் மூலம், எங்கள் ஆர்டர் புத்தகம் ரூ.1,025 கோடியை எட்டியது. அதே வேளையில் லோகோமோட்டிவ் தயாரிப்புகளுக்காக இந்திய ரயில்வேயிடமிருந்து ரூ.127 கோடி மற்றும் ரூ.101 கோடி மதிப்புள்ள இரண்டு ஆர்டர்களையும் பெற்றுள்ளோம்.
நிறுவனத்தின் பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உள்பட, தற்போதுள்ள குழுவிற்கு ரூ.27.4 கோடி மதிப்புள்ள முன்னுரிமை வாரண்டுகளை வழங்க இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.