ஹிந்தியில் ரீமேக்காகும் பெருசு!

dinamani2F2025 08 172Fbsy8389a2FGnrbChmWsAAhOl5
Spread the love

பெருசு திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் இளங்கோ ராம் இயக்கிய திரைப்படம் பெருசு. கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தில் வைபவ் நாயகனாகவும் சுனில், பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி, முனீஸ்காந்த், நிஹாரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர்.

மரணப்படுக்கையில் இருக்கும் குடும்பப் பெரியவரின் இறப்பில் நேரும் ஒரு சம்பவம் பற்றிய துயர நகைச்சுவைக் கதையாக ’அடல்ட் காமெடி’ பாணியில் பெருசு படம் உருவாகியிருந்தது.

இந்தப் படம் கடந்த மார்ச் 14 ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றதுடன் வணிக ரீதியாகவும் வெற்றிப்படமானது.

இந்த நிலையில், இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தை ஹன்சல் மேத்தா இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

பெருசு திரைப்படம் சிங்களப் படமான டெண்டிகோ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *