ஹிமாசலப் பிரதேசத்தில் பெய்துவரும் கனமழையைத் தொடர்ந்து 72 சாலைகள் மூடப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 2 வரை தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
சிம்லாவில் 35, மண்டியில் 15, காங்க்ராவில் 10, குலுவில் 9 மற்றும் உனா, சிர்மௌர் மற்றும் லாஹவுல் மற்றும் ஸ்பிதி மாவட்டங்களில் தலா ஒன்றும் மூடப்பட்டுள்ளதாக மாநில அவசரக்கால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக மாநிலத்தில் 10 மின்சாரம் மற்றும் 32 நீர் வழங்கல் திட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
பருவமழை தொடங்கி தற்போது வரை மழை தொடர்பான சம்பவங்களில் 150 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மழையினால் ஏற்பட்ட சேதத்தால் மாநிலத்திற்கு ரூ.1,265 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை முதல் மாநிலத்தின் சில பகுதிகளில் இடைவிடாத மழை தொடர்ந்து பெய்து வருகின்றது. சுந்தர்நகரில் 44.8 மிமீ மழையும் அதைத் தொடர்ந்து ஷிலாரூ (43.1 மிமீ), ஜுப்பர்ஹட்டி (20.4 மிமீ), மணாலி (17 மிமீ), சிம்லா (15.1 மிமீ), ஸ்லாப்பர் (11.3 மிமீ) மற்றும் டல்ஹவுசி (11 மிமீ) மழையும் பெய்துள்ளது.
செப்டம்பர் 2ஆம் தேதி மாநிலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் கனமழை, இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலுக்கான மஞ்சள் எச்சரிக்கையை உள்ளூர் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.