ஹெச்.ராஜாவுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி: ஐகோர்ட் உத்தரவு | court granted permission for award ceremony to H Raja

1340706.jpg
Spread the love

சென்னை: பாஜக ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் நிறுவனத்தின் ஆண்டு விழாவையொட்டி, 2024-ம் ஆண்டுக்கான சனாதன பெருந்தமிழர் சங்கமம் விருது வழங்கும் நிகழ்ச்சி வரும் 24-ம் தேதி தியாகராய நகரில் நடைபெற உள்ளது. இதில், பாஜக ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் ஹெச்.ராஜாவுக்கு சனாதன பெருந்தமிழர் விருது வழங்கப்படவுள்ளது.

இந்த நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி தியாகராய நகர் இணை ஆணையர், துணை ஆணையர் மற்றும் மாம்பலம் காவல் நிலையத்தில் கடந்த நவ.18-ம் தேதி சம்பந்தப்பட்ட நிறுவனம் மனு அளித்தது. மனு மீது எந்த உத்தரவும் காவல்துறை பிறப்பிக்கவில்லை எனக் கூறி, நிறுவனத்தின் இயக்குநர் ராஜவேல் நாகராஜன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ராமசாமி மெய்யப்பன் ஆஜராகி, “சனாதன பெருந்தமிழர் சங்கமம் விருது வழங்கும் நிகழ்ச்சி பொது வெளியில் நடைபெறவில்லை. உள்ளரங்கில் நடைபெறவுள்ளதால் அந்நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி வழங்க வேண்டும்” என தெரிவித்தார்.

இந்த வாதத்தை கேட்ட நீதிபதி, உள் அரங்கில் நடைபெறும் சனாதன பெருந்தமிழர் சங்கமம் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *