ஹோட்டல் வருவாய் ரூ.50; ஆனால், ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.15 லட்சம்! கங்கனா ஆதங்கம்!

dinamani2F2025 09
Spread the love

ஹிமாசலில் பெய்த கனமழையால் தானும் பாதிக்கப்பட்டதாக எம்.பி. கங்கனா ரணாவத் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஹிமாசல பிரதேசத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டது.

இந்த நிலையில், மாநிலத்தில் பாதிப்பு ஏற்பட்டு சுமார் 20 நாள்களுக்கு பின்னர், மண்டி தொகுதியில் பாதிக்கப்பட்ட இடங்களை எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரணாவத் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது அவர் பேசுகையில்,

“நான் எந்த நிலைமையில் இருக்கிறேன் என்று நினைத்துப் பாருங்கள். நானும் இங்கே ஒரு உணவகம் நடத்தி வருகிறேன். அங்கே, நேற்று வெறும் ரூ.50-க்கு மட்டுமே வியாபாரம் ஆனது. ஆனால், நான் ரூ.15 லட்சத்துக்கு சம்பளம் கொடுக்க வேண்டியுள்ளது. தயவுசெய்து என் வலியையும் புரிந்துகொள்ளுங்கள். நானும் ஒரு மனிதர்தான்’’ என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

முன்னதாக, அவர் தொகுதியை ஆய்வு செய்ய முற்பட்டபோது, “திரும்பிச் சென்று விடுங்கள், நீங்கள் தாமதமாக வருகிறீர்கள்’’ என்று கறுப்புக் கொடியுடன் அப்பகுதி மக்கள் கோஷமிட்டனர்.

இதையும் படிக்க: நீ உச்சத்திலேயே இரு! விஜய் மீது சீமான் காட்டம்?

Kangana Ranaut’s ordeal to Mandi flood victims

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *