கடந்த மாா்ச் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 4,27,448-ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 11 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 3,86,455 இரு சக்கர வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது. மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு மொத்த விற்பனை 4,01,411-ஆகவும் ஏற்றுமதி 26,037-ஆகவும் உள்ளது.
ஹோண்டா 2 சக்கர வாகன விற்பனை 11% உயா்வு
