Last Updated:
விலை உயர்வால் இந்தியாவில் லேப்டாப் விற்பனை நடப்பாண்டு 8 சதவீதம் வரை குறையக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது
டேட்டா சென்டர்களுக்கான சிப் தேவை அதிகரிப்பு, ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் செமிகண்டக்டர் உற்பத்தியில் உருவான சுணக்கம் உள்ளிட்ட காரணங்களால் நடப்பாண்டு லேப்டாப் விலை 35 சதவீதம் வரை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போர் காரணமாக ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால், மூலப்பொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் செமிகண்டக்டர் உற்பத்திக்கான செலவு கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும், உலகளவில் டேட்டா சென்டர்களுக்கான சிப்களின் தேவை கணிசமாக அதிகரித்துள்ளதால் இன்டெல் உள்ளிட்ட மென்பொருள் நிறுவனங்களின் தொடக்க நிலை சிப்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
லேப்டாப்
இதன் காரணமாக லெனோவா, டெல், Acer, Asus போன்ற நிறுவனங்கள் தனிநபர் கம்ப்யூட்டர், லேப்டாப் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நடப்பாண்டு கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் விலை ஏறத்தாழ 35 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலை உயர்வால் இந்தியாவில் லேப்டாப் விற்பனை நடப்பாண்டு 8 சதவீதம் வரை குறையக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவுக்கு பின்னர் கடந்த ஆண்டுதான் இந்தியாவில் ஒரு கோடியே 50 லட்சம் லேப்டாப்கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
